Valentine’s Day / காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
காதலர் தின வாழ்த்துக்கள் பதிவிறக்ககம் செய்ய : DOWNLAOD
உலகெங்கிலும் உள்ள காதலர்களுக்கு, பிப்ரவரி மாதம் 14 – ல் – தங்கள் துணையை அன்பிலும் பாசத்திலும் பொழிவதற்கு “செயின்ட் வாலெண்டின்” உத்வேகம் அளிக்கிறது.
Why Valentine’s Day Celebrated? / காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
செயிண்ட் வாலண்டைன், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம் நாட்டைச் சேர்ந்த பாதிரியார் என்று சிலர் கூறுகிறார்கள். பேரரசர் கிளாடியஸ் II, திருமணங்களைத் தடைசெய்தார், ஏனென்றால் திருமணமான ஆண்கள் மோசமான வீரர்களாக, போருக்கு லாயக்கற்றவர்களாக அறியப்பட்டனர்.
செயிண்ட் வாலண்டைன், இது ஒரு நியாயமற்ற கருத்து என உணர்ந்து ரகசியமாக திருமணங்களை நடத்திவைத்தார். இதை அறிந்த மன்னர் கிளாடியஸ், செயின்ட் வாலன்டின் – ஐ, சிறையில் அடைத்து மரண தண்டனை விதித்தார்.
சிறையில், செயிண்ட் வாலண்டைன் ஜெயிலரின் மகளைக் காதலித்தார். செயிண்ட் வாலண்டைன் கொல்லப்படுவதற்க்ககாக நிர்ணயிக்கப்பட்ட நாள் – பிப்ரவரி 14. அன்று அவர் கொல்லப்படுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, “உங்கள் காதலரிடமிருந்து” .. என்று கையொப்பமிடப்பட்ட காதல் கடிதத்தை தன் காதலிக்காக அனுப்பினார். இந்த தேதியை தான் நாம் வாலெண்டின்ஸ் டே – காதலர் தினம் என்று கொண்டாடுகிறோம்.