Valentine day images / காதலர் தின படங்கள்
கவிதை தொகுப்பு / Valentine’s day Wishes in Tamil
கவிதை:1
நாம் சந்திப்பதற்கு முன்பே நான் உன்னை நேசித்தேன் என்பது எனக்குத் தெரியும்.
கவிதை:2
என் வாழ்க்கையிலும் “கி மு” மற்றும் “கி பி” போல “உ மு” மற்றும் “உ பி” உண்டு..
உன்னை சந்திப்பதற்கு முன் “உ மு” மற்றும் உன்னை சந்தித்ததற்க்கு பின் “உ பி“.
கவிதை:3
நீயும், நான் பார்க்கும் அதே நட்சத்திரங்களை மேலே பார்க்கிறாயோ என்று ஆச்சரியப்படுவேன்..
இரவில் தன்னந்தனியே வானத்தை பார்த்தவனாய்.
கவிதை:4
காதலர் தினத்தன்றுதானே நம்முடைய முதல் பிரிவு!!
நீ இல்லாத இன்றைய தினம்..
காகிதமானது என் மனம்.
கண்ணீரை ‘மை’-யாக்கி சேமித்தேன் மடல் எழுத ..
அதுவும் வீனே!!
காரணம் உன் முகவரி தெரியாது எனக்கு.
தெரிந்ததெல்லாம் உன் சோசியல் மீடியா முகவரி மட்டும்..
கவிதை:5
நெருங்கிய தோழியை விரும்பினேன்!
தவறா?
விருப்பப்பட்டது மனைவியாக்க என்றேன் அவளிடம்!!
ஆச்சர்யப்பட்டால் அவள்!
அன்று தான்புரிந்தது நட்பு எதயும் எதிர்பார்க்காது…
இன்றும் அவள் என்னுடைய தோழிதான்
கைபேசியில் மட்டும்.
கவிதை:6
உன்னை பார்த்த முதல் நாளை மறந்துவிட்டேன் !!
ஏனென்றால் அன்று தான் நான் பிறந்தேன்.
மழலையாய் ஆக்கிவிட்டாய்
அதனால் தான் என்னவோ நான் கனவிலும் சிரிக்கிறேன்
உன்னை விட்டு பிரியும் தருணம் ஒவ்வொன்றும்
என்னை இழந்த உணர்வை கொடுக்கும்
தாயை பிரிந்த குழந்தையை போல.