தைப்பூசம் தோன்றிய வரலாறு
தைப்பூசம், மார்கழி மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும் மற்றும் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் அனுசரிக்கப்படுகிறது.
சிவபெருமானின் வரம் பெற்ற சூரபத்மன், தாரகாசூரன், சிங்கமுகாசுரன் ஆகிய இந்த மூன்று அசுரர்களும் தேவர்களை அழிக்க தொடங்கியதால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் தன்னுடைய நெற்றி கண்ணால் ஆறு குழந்தைகளை கார்த்திகை பெண்களிடம் வளர்க்கும்படி அமைத்தார்.
இந்த ஆறு குழந்தைகளும் போர் பயிற்சி மேற்கொண்டு வளர்ந்து வந்த பின் பார்வதி அம்மையார் அவர்கள் ஆறு பேரையும் ஒருவராக்கி, நம் தமிழ் கடவுள் முருகனை கொடுத்தார். பழனியில் ஆட்கொண்டிருந்த முருகனிடம், பார்வதி தேவி முருகனின் ஆயுதமான வேலை அருளி அந்த மூன்று அசுரர்களையும் வதம் செய்ய பணித்தது இந்நாளாகும்.
தமிழ் கடவுளாம் முருகனுக்கு உகந்த நாளான இன்று காவடி எடுத்தும். அலகு குத்தியும், பற்பல வேண்டுதல்களை பக்தர்கள் மேற்கொண்டு, அன்னதானம் இட்டு, கோவிலுக்கு மாலை அணிந்து, பால் குடமேந்தி தங்களால் இயன்ற அனைத்து நல்ல காரியங்களையும் செய்து இந்நாளில் முருகப் பெருமானுக்கு தங்களை அர்ப்பணிக்கின்றனர்.